ஈ.பி.எஸ். இடம் சாவி ஒப்படைக்க உத்தரவு: பெரம்பலூரில், முன்னாள் எம்.பி. சந்திரகாசி தலைமையில் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

schedule
2022-07-20 | 12:16h
update
2022-07-20 | 12:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

EPS Place key handover order: In Perambalur, AIADMK led by former M.P. Chandrakasi gave sweets and burst firecrackers to celebrate!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரு தரப்பினர் இடையே ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நடந்த மோதலால் வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதற்கு இரு தரப்பும் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி என் சதீஷ்குமார்.,

Advertisement

எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இடம் சாவி உடனடியாக ஒப்படைக்க வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்க கூடாது. அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் உத்திரவிட்டிருந்தார்.

இதனால், மகிழ்ச்சி அடைந்த ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள், முன்னாள் எம்.பி சந்திரகாசி தலைமையில் அதிமுகவினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 05:09:00
Privacy-Data & cookie usage: