Equity Pongal Festival in Ramanathapuram Government Women’s College


ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் தனது தந்தை முதுனாள் பாண்டியன் பெயரில் ரு.25 ஆயிரம் நன்கொடை வழங்கினார். இத்தொகை மாணவிகளின் கல்விக்கு உதவி தொகையாக பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.

ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் லோகநாதன் தலைமையிலும், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் முன்னிலையிலும் நடந்தது. விழாவில் முதல்வர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

கல்லுாரி மாணவிகள் பேராசிரியர்கள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். பின் மாணவிகளுக்கான பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

விழாவில் பேசிய ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் தனது தந்தை முதுனாள் பாண்டியன் பெயரில் கல்லுாரி மாணவிகளுக்கான ரு.25 ஆயிரம் வங்கியில் டிபாசிட் செய்து நன்கொடையாக வழங்கினார்.

இந்த டிபாசிட் தொகையின் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் கல்லுாரியில் பயிலும் மாணவிகளில் கல்வியில் சிறந்து விழங்கும் மாணவிகள் தேர்வு செய்து பரிசு தொகையாக வழங்கும்படி தெரிவித்தார். மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

செய்தி: இ.சிவசங்கரன், ராமநாதபுரம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!