பெரம்பலூர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி; எசனை புதிய ரேசன் கடைக்கு, ரூ. 10 லட்சம் மதிப்பில் பூமி பூஜை!

schedule
2022-07-11 | 14:46h
update
2022-07-11 | 14:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Esanai Ration Shop Bulding bomi Puja worth 10 lakhs from Perambalur MLA Constituency Development Fund

பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் புதிய ரேசன் கடை கட்டிட பணிகளுக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில், கலெக்டர் வெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.

Advertisement

எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு, தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நியாயவிலை கடைகளுக்கு, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து , எசனை-2 அங்காடிக்கு, புல எண் 197 உட்பிரிவு 1பி- இல் 3000 சதுரஅடி நிலப்பரப்பு கொண்ட இடத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பிலான புதிய நியாயவிலை அங்காடி கட்டுவதற்காக பூமிபூஜை கலெக்டர் வெங்கட பிரியா அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் ஒன்றியக்குழுத் தலைவர் மீனா அண்ணாதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.சங்கர், சரக துணைப் பதிவாளர் த.பாண்டித்துரை, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ், எசனை ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா பன்னீர்செல்வம், உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 03:56:30
Privacy-Data & cookie usage: