புனித தலங்கள், திருக்கோயில்களில் இரவுநேர பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

schedule
2018-03-12 | 13:55h
update
2026-07-05 | 01:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ex-servicemen may apply for night-time guard in the holy places and shrines
பெரம்பலூர மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித தலங்கள் மற்றும் திருக்கோயில்களில் இரவுநேர பாதுகாப்பு பணிக்கு தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 62-க்குள் இருக்கவேண்டும். எழுதபடிக்க தெரிந்திருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாதம் ரூ.5,000- சம்பளத்தில் பணி அமர்த்தப்படுவர்.

எனவே, விண்ணப்பதாரர்கள் அசல் படை விலகல் சான்று மற்றும் முன்னாள் படைவீரரின் அடையாள அட்டை ஆவணங்களுடன், உதவி இயக்குநர், மாவட்ட முன்னாள் படைவீரர் நலன், 72ஏ, புதிய மார்க்கெட் வீதி, அரியலூர் – 621 704 என்ற முகவரியில் ? நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மேல் விவரங்களை, அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை 04329-221011 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு பயன்பெற கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 01:47:51
Privacy-Data & cookie usage: