Excessive blast noise in the stone quarry, steps taken to prevent dust flying: Perambalur Collector confirmed in the farmers’ grievance day meeting!

பெரம்பலூர். மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த திட்டங்கள் குறித்து தொடர்புடைய துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், திட்டங்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்தனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பேசியதாவது: ராஜீ பேசியதாவது: பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி வழங்கியமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். வி.ஜெயராமன் பேசும் போது: பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கு.ராமராஜன் பேசும் போது: தோட்டக்கலைத் துறை மூலம் ஆழ்த்துளை கிணறு அமைக்க மானியம் வழங்க வேண்டுமெனவும், ரமேஷ் பேசும் போது, தழுதாழை கிராமம் அய்யனார்கோவில் அருகில் சமுதாய களம் அமைத்து கொடுக்க வேண்டுமெனவும், டி.கே.ராமலிங்கம் பேசும் போது: மாவட்டத்தில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தார். ஏ.கே. ராஜேந்திரன் பேசும் போது, வி.களத்தூர் மற்றும் அயன்பேரையூர் பஞ்சாயத்து சாலையை சரி செய்து கொடுக்க வேண்டுமெனவும், வரதராஜன் பேசும் போது: எறையூர் சர்க்கரை ஆலை சரியான முறையில் இயங்க வேண்டுமெனவும், செல்லத்துரை பேசும் போது: பால்வளத் துறை மூலம் மானியத்தில் மாட்டுத் தீவனம் கிடைக்க வேண்டுமெனவும், அ.மேட்டூர் நீலகண்டன் பேசும் போது: மலையாளப்பட்டி பகுதியில் சமுதாய களம் அமைத்து கொடுக்க வேண்டுமெனவும், கேட்டுக் கொண்டனர்..

அதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2023 டிசம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 861 மி.மீ., பெய்த மழையளவு 739.10 மி.மீ, ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 86505 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 7.06 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், சிறுதானியங்களில் 1.777 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், பயறு வகைகளில் 2.427 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், எண்ணெய்வித்து பயிர்களில் 1.705 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும்,

தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் முருங்கை பரப்பு அதிகரித்தல், கல் பந்தல் அமைத்தல் பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது, எனவும்,

வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக் கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், பருத்தியில் அதிகளவில் மகசூல் கிடைக்கவும். பருத்தி விதைகளை ஆய்வு செய்து தரமான விதைகளை வழங்கவும் வேளாண்மைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்துத் துறை மூலம் ஏரிகளில் உள்ள சீமைகருவேல் மரங்களை அகற்ற வேண்டும். தெரணி கிராமத்தில் உள்ள ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குரூரிலிருந்து நக்கசேலம் வரை பேருந்து வசதியை நீட்டித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்குவாரியில் அதிகமான வெடி சத்தம் வருவதை தடுக்கவும், புழுதிகள் பறப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதில் மாவட்ட அளவிலான அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!