பெரம்பலூர் அருகே அளவிற்கு அதிமான கூட்டம், பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவிக்கு கை, கால் முறிந்தது !

schedule
2022-04-25 | 08:29h
update
2022-06-12 | 11:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Excessive crowd near Perambalur, student’s arm and leg broken after falling off bus!!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகள் விஜயலட்சுமி (16), அருகே உள்ள நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம் போல் இன்றும் பள்ளிக்கு செல்ல, பாடாலூர் – துறையூர் செல்லும் நகர பேருந்தில் முன்பகுதியில் ஏறி சென்றார். கூட்டம் அளவிற்கு அதிமாக இருந்ததால், நக்கசேலம் அருகே பஸ் வரும் போது, தவறுதலாக கீழே விழுந்ததில் மாணவி விஜயலட்சுமிக்கு வலது கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடியதாக கூறப்படும், டிரைவர் மற்றும் கண்டக்டரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 14:38:42
Privacy-Data & cookie usage: