சுண்டல் கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பெரம்பலூர் கலெக்டர் ஆபிசில் 3 குழந்தைகளுடன் தம்பதி தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு

schedule
2022-06-08 | 15:30h
update
2022-06-08 | 15:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Excitement as the couple with 3 children came to Petrol Canes at Perambalur Collector’s Office

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா – லதா தம்பியினர் இன்று மதியம் தனது 3 குழந்தைகளுடன், புகுந்தனர். அங்கு பணியில் இருந்த ஏட்டு மோகன் உள்ளிட்ட போலீசார் சந்தேகமடைந்து அவர்களிடம் சோதித்ததில் சிறிய 2 கேன்களில், பெட்ரோல், மற்றும் மண்ணெண்ணெய் எடுத்து வந்திருந்தை கண்டு மேலும், விசாரித்தனர்.

Advertisement

அப்போது அவர்கள் தெரிவித்தாவது: தழுதாழை – அரும்பாவூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அவர்களது சொந்தமான இடத்தில் சுண்டல், தட்டைப்பயிறு வேகவைத்து விற்று வருவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு சுமார் 7 பேர் ஜீவனம் செய்வதாகவும், கொரோனாவால் வேலை கிடைக்காத நிலையில் தற்போது வயிற்று பிழைப்பிற்காக செய்து வருவதாகவும் தெரிவித்தனர். விற்க கூடாது என அதே பகுதியை சேர்ந்த திமுகவினர்களும், மது பார் டெண்டர் எடுத்தவர்களும் தனது கடையை அடித்து நொறுக்கி விட்டதாகவும், இது குறித்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதால் கலெக்டரை பார்த்து மனு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து கலெக்டர் வெங்கடபிரியா காவல் துறையினருக்கு விசாரணை நடத்த உத்திரவிட்டார். இதனால் கலெக்டர் ஆபிசில் சற்று நேரம் பரபரப்பபு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 20:43:34
Privacy-Data & cookie usage: