சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2020-11-10 | 15:02h
update
2020-11-10 | 15:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Extension of time for minority students to apply for scholarships: Perambalur Collector!

பெரம்பலூர் வெங்கட பிரியா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர் புத்தமத்தினர் பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும், மைய -மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-21-ம் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐ.டி.சி,வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை,முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழிற்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நவ.30 வரை நீட்டிக்கப்பட்டள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் தற்பொது பயிலுவதற்கு முந்தைய வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான அனைத்து சிறுபான்மையினர் இன மாணவ மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 11:03:13
Privacy-Data & cookie usage: