தற்காலிக பட்டாசு கடைகளுக்கான அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தகவல்

schedule
2020-10-14 | 17:00h
update
2020-10-14 | 17:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Extension of time for obtaining permission for temporary firecracker shops: Perambalur Collector Santha Info

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன்படி கீழ் பட்டாசு உரிமம் கோரி மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பம் தாக்கல் செய்ய விரும்புகிறவர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்கள் மற்றும் இணைப்புகளுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம் மூலம் 10.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கால அவகாசம் 23.10.2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கோரி விண்ணப்பங்கள் 23.10.2020 வரை பொது சேவை மையங்களில் பெறப்படும். விண்ணப்பிக்கும்போது உரிமம் கோரும் இடத்தின் வரைபடங்கள் 6 பிரதிகளுடன் உரிய கணக்கு தலைப்பில் தற்காலிக உரிம கட்டணம் ரூ.500- செலுத்தப்பட்டமைக்கான ரசீது, பத்திரம் நகல், ஆதார் அட்டை நகல், சொத்து வரி ரசீது மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றினை இணைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 02:33:41
Privacy-Data & cookie usage: