மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-10-28 | 16:20h
update
2022-10-28 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Extension of time to apply for central government scholarship: Perambalur Collector Information!

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஒன்றிய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31.10.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 05:51:57
Privacy-Data & cookie usage: