அனுமதியற்ற மனைகளை வரைமுறைப்படுத்த காலம் நீட்டிப்பு ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-10-12 | 14:19h
update
2023-10-12 | 18:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Extension of time to regularize unauthorized plots; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, அரசாணை எண்.118, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நாள்.04.09.2023-ன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம். இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Advertisement

  

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 04:52:24
Privacy-Data & cookie usage: