தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பேஸ்புக்கில் பக்கம் துவக்கியது

schedule
2016-02-20 | 09:35h
update
2026-09-16 | 09:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் முக்கிய செய்திகளை பேஸ்புக்கில் TNelectionsCEO என்ற முகவரியில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் –

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றப்பேரவைக்கான பொதுத் தேர்தல் தொடர்பான தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்திகளை தெரிந்துகொள்ள பேஸபுக்கில் TNelectionsCEO என்ற முகவரி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் ஜனநாயகக்கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழ்நாடு தலைமை தேர;தல் ஆணையத்தின் முக்கிய செய்திகள், தகவல்கள், படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Advertisement

அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த முகநூல் பக்கத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.

மேலும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக http://www.elections.tn.gov.in, என்ற முகவரியில் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதவர்கள் பெயர்களை சேர்க்க படிவம் 6யும், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7யும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8யும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமல்லாது வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வாக்காளர் அடையாள அட்டை எண்ணை 1950 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால், உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் எந்த பகுதியில், எந்த வரிசை எண்ணில் உள்ளது என்ற தகவல்கள் உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.
எனவே, நமது ஜனநாயக் கடமையாற்ற முன்வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள தேர்தல் ஆணைம் கூறும் வழிமுறைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 09:28:37
Privacy-Data & cookie usage: