குடும்ப அட்டையுடன் மொபைல் எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ள அறிவிப்பு

schedule
2017-03-31 | 10:40h
update
2026-06-26 | 21:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Family Card to register with the mobile number registered did not immediately notice

நாளை முதல் (ஏப்.1) முதல் அனைத்து குடும்ப அட்டைகளும் மின்னணு குடும்ப அட்டைகளாக வழங்கப்படவுள்ளது. புதியதாக வழங்கப்படவுள்ள மின்னணு குடும்ப அட்டையினை செயலாக்கம் செய்திட, தற்போது வைத்திருக்கும் குடும்ப அட்டையுடன் நியாயவிலை அங்காடியில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு கடவுச்சொல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

Advertisement

குறுஞ்செய்தி பெறப்பட்டவர்கள் மட்டும் அந்தக் குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல்லினை நியாயவிலை அங்காடியில் உள்ள விற்பனை இயந்திரத்தில் அங்காடி விற்பனையாளர் மூலம் பதிவு செய்தவுடன் மின்னணு குடும்ப அட்டை செயலாக்கம் செய்யப்படும்.

எனவே, குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு பதில் வேறு மொபைல் எண் மாற்றியிருந்தாலோ அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்திற்கு சென்று புதிய மொபைல் எண்ணை கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் அல்லது www.tnpds.com என்ற இணைய தளத்திலும் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 21:57:33
Privacy-Data & cookie usage: