குடும்பத் தகராறு : பெரம்பலூர் அருகே விஷம் குடித்து சலவை தொழிலாளி சாவு

schedule
2016-08-22 | 17:00h
update
2026-06-24 | 13:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Family dispute: in Perambalur laundry worker death at the drinking poison

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (என்கிற) முத்துசாமி (வயது 40). சலவை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இதனால் மனமுடைந்த அண்ணாமலை இன்று வீட்டில் ஆள் யாரும் இல்லாத போது (பூச்சி மருந்து) விஷம் குடித்துள்ளார். வெளியே சென்றிருந்த சங்கீதா வீட்டிற்கு வந்து பார்த்த போது அண்ணாமலை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அண்ணாமலைக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 13:53:59
Privacy-Data & cookie usage: