பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறு: மாமனாரை அடித்து கொன்ற மருமகன் உள்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

schedule
2021-04-24 | 08:47h
update
2021-04-24 | 09:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Family dispute near Perambalur: Police nab 4, including son-in-law who beat death father-in-law !!

பெரம்பலூர் அருகே குடும்பத்தகராறில் மருமகனை தட்டிக் கேட்ட மாமனாரை தாக்கிய சம்பவத்தில் இன்று மாமனார் உயிரிழந்தது அ

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. (வயது 60). சலவைத் தொழிலாளி. இவரது மகள் ரஞ்சிதா (வயது 27), இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம், கூடலூரை சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இந்நிலையில் செல்வம், ரஞ்சிதா இருவருக்கும் அடிக்கடி குடுமபத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் செல்லமுத்து இன்று காலை கூடலூர் கிராமத்திற்கு வந்து மருமகன் செல்வத்திடம் விசாரித்துள்ளார். இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதமாகி கைகலப்பில் முடிந்தது. இதில், செல்லமுத்து அடி தாங்க முடியாமல் கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வம் உட்பட தாக்கிய 4 பேர் தலைமறைவாகினர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டி.எஸ்.பி சரவணன், மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, செல்லமுத்துவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருமகன் செல்வம் உள்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தட்டி கேட்ட மாமனாரை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 05:26:25
Privacy-Data & cookie usage: