நாமக்கல் சாலை ஓரத்தில் படுகாயங்களுடன் பிரபல ரவுடி மீட்பு; போலீஸ் விசாரணை

schedule
2018-05-11 | 19:00h
update
2018-05-11 | 19:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Famous Rowdy Recovery with injuries on the road side of Namakkal; Police investigation

நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்ற காசிராஜன் (வயது 27). இவர் மீது நாமக்கல் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இன்று இரவு திருச்சி சாலை எஸ்கே நகர் என்ற இடத்தில் சாலையோரத்தில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Advertisement

காசிராஜன் இன்று இரவு மோட்டார்சைக்கிளில் எஸ்.கே.நகர் பகுதியில் சென்றபோது சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நாமக்கல்லை சேர்ந்த பழ வியாபாரி சுப்புராஜ் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் காசிராஜனுக்கு தொடர்பு உள்ளது. இந்த வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்த வழக்கு தவிர வேறு சில வழக்குகளும் அவர் மீது உள்ளது.

இந்த நிலையில் தான் அவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. முன் விரோதத்தில், அவரை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்ற கோணத்திலும், நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 02:44:53
Privacy-Data & cookie usage: