பெரம்பலூர் அருகே எதிர்திசையில் வந்த பால்வண்டி மோதி விவசாயி பலி

schedule
2018-03-12 | 07:06h
update
2026-07-05 | 01:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Farmer killed in the opposite direction collided near Perambalur the Milk van

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் இன்று காலை எதிர்திசையில் சென்ற பால் ஏற்றி சென்ற வேனும், அவ்வழியே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்களில் வந்து கொண்டிருந்த விவசாயி மீது மோதியதில், விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

பாடாலூர் பகுதியில் இருந்து வழக்கம் பால் கேன்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சாலை விதிகளுக்கு புறம்பாக சர்வீஸ் சாலையில் எதிர்திசையில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை தெரணி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்த விவாசயி செல்லதுரை என்பவர் மோட்டார் சைக்கிளில் பாடாலூர் நோக்கி வந்து கொண்டிருந்தவர் மீது பால்வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லததுரை பரிமாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த விவசாயி செல்லதுரை உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பால்வண்டியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய பால்வண்டி ஓட்டுனர் லோகநாதனை தீவிர தேடி வருகின்றனர். இது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 01:47:38
Privacy-Data & cookie usage: