பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

schedule
2016-03-20 | 19:47h
update
2026-06-22 | 12:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கவேல்(63). இவர் இன்று காலை தனது வயல் காட்டிற்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுட்சை போட்டுள்ளார்.

Advertisement

அப்போது எதிர்பாதவிதமாக மின் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன தங்கவேலின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 12:40:25
Privacy-Data & cookie usage: