குளத்தில் குளிக்க சென்ற விவசாயி நீரில் மூழ்கி பலி!

schedule
2017-04-19 | 09:55h
update
2026-06-27 | 15:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Farmer went to bathe in the pool and drown in the water!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கிழுமத்தூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் வீரமுத்து மகன் கருப்பன் (55) இவரது மனைவி நீலாவதி இவர் விவசாயம் செய்து வருகிறார்.

Advertisement

கருப்பனுக்கு உடலில் அடிக்கடி வலிப்பு போன்ற நோய் வருவதாக கூறபடுகிறது நேற்று இரவு 8 மணிக்கு கருப்பன் வீட்டின் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு வலிப்பு எற்பட்டு அலறினார் அவர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே கருப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி நீலாவதி கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 15:38:51
Privacy-Data & cookie usage: