Farmers become the redressal day meeting. 30. Change : perambalur Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தக்கூட்டம் 30.8.2016 (செவ்வாய் கிழமை) அன்று மாற்றப்பட்டுள்ளது. அன்றையதினம் காலை 11.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர; அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர;க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.