Farmers’ Complaints Day Meeting: Perambalur Collector Announcement!
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஏப். 29.04.2022 அன்று காலை 10.00 மணியளவில் கலெக்டர் ஆபிசில் நடைபெற உள்ளது.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் (KVK), சர்க்கரை ஆலை, நபார்டு (NABARD), எல்.டி.எம். (LDM) சகோதரத்துறைகள், கால்நடைத்துறை, மீன்வளத்துறை, ஆவின், வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவுத்துறை, வணிக வங்கிகளும்,
புதிய தொழில்நுட்பங்கள், நேரடி நெல் விதைப்பு, எஸ்.ஆர்.ஐ. தொழில்நுட்பம், இயந்திர நடவு, சொட்டு நீர் பாசன அமைப்பு, பூச்சி நோய் அறிகுறிகள்,பயிர் காப்பீடு, புதிய இயந்திரங்கள் அதன் பயன்பாடுகள், நலத்திட்டங்கள், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம், மதிப்பு கூட்டுதல் பற்றிய செய்திகள் பற்றி விவசாயிகளுக்கு புதிதாக யோசனைப்படி ஆக்கப் பூர்வமாக விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் புதிய தொழில் நுட்பங்கள் பயன்பெறும் வகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். விவசாயிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்துவரவேண்டும்.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும் என்றும்,
விவசாயிகள் என்பதற்கு ஆதாரமாக கணினி சிட்டா கொண்டு வர வேண்டும். அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.