Farmers demand to take action against water stealing companies in the canal near Tirupur

திருப்பூர் பி.ஏ.பி வாய்க்கால், மற்றும் கிளை வாய்க்கால்களிள் அதிகரித்து வரும் குடிநீர் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் ந்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சார் ஆட்சியர் ஷரவண் குமார் தலைமை வகித்தார், வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதன் படி திருப்பூர் வட்டம் ஆண்டிபாளையம் குளம் சுமார் 56 ஏக்கர் பரப்பளவில் இருந்து வருகின்றது. பொதுபணிதுறைக்கு சம்பந்தமான இந்த குளம் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ளது, இந்த குளத்தில் விவசாயிகல் வண்டல் மண் செம்மண் ஆகியவைகளை எடுத்து குளத்தை ஆழ்ப்படுத்தியுள்ளதால், தண்ணீர் நிறைந்து காணப்படுகின்றது.

திருப்பூருக்கு மிக அருகாமையில் உள்ள இந்த குளத்தில் மேற்கு பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது.இதில் குழந்தைகளும் பெண்களும் மாலை நேரங்களில் பொழுதை போக்குகின்றார்கள். இதனால் இந்த குளத்தில் படகு சவாரியை மீண்டும் துவங்க வேண்டும்.

மேலும் திருப்பூர் தாலுக்கா அலுவலகங்களில் வாரிசு சான்று பெறுவதற்க்கு ஆன் லைனில் விண்னப்பித்தாலும் அவற்றை பெறுவதற்க்கு பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது பொதுமக்கள் அழைக்கழிக்கபடுகிறார்கள், இதனால் விண்ணப்பித்து சில நாட்களிள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பி.ஏ.பி வாய்க்கால், மற்றும் கிளை வாய்க்கால்களிள் தண்ணீர் திருட்டு அதிகரித்து உள்ளது. அதுமட்டுமின்றி கால்வாயை ஓட்டி பல தண்ணீர் நிறுவனங்கல் அவர்களின் வியாபர தேவைக்காக தண்ணீரை உரிஞ்சி எடுத்துக்கொள்கின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:

Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!