Farmers’ grievance redressal day meeting through video: Perambalur Agriculture Department announcement
பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறை விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் நவ.20 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.
விவசாயிகள் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காணொளிக் காட்சி மூலம் நடைபெற உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
மேலும், கொரோனா நோய் தொற்று காரணமாக விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தவிர்த்து வேறு வட்டார அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் தெரிவித்துள்ளார்.