தோட்டக்கலைத்துறை அனைத்து திட்ட பலன்களை பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்:  துணை இயக்குநர் இந்திரா தகவல்!

schedule
2022-06-29 | 15:20h
update
2022-06-29 | 15:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Farmers need to register online to avail all project benefits of Horticulture: Deputy Director Indira Info!

பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மா. இந்திரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

தோட்டக்கலைத் துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களில் மானியங்களும் வழங்கப்படுகின்றன. வரும், 2022-23-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்யவேண்டும். “இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்கப்படும். இதற்காக விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்யவேண்டும்.

பதிவு செய்யத் தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 22:56:48
Privacy-Data & cookie usage: