நன்னீர் மீன் வளர்ப்பு மேற்கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு : நாமக்கல் ஆட்சியர் தகவல்

schedule
2018-10-24 | 16:33h
update
2026-04-22 | 15:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Farmers to apply for freshwater aquaculture are invited to apply: Namakkal Collector

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையின் மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலபுரட்சி திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் நன்னீர் மீன்வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

Advertisement

இதில் புதிய மீன்பண்ணைக் குளங்கள், குட்டைகள் அமைத்தல், ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பு குளம் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7 லட்சத்தில் 40 சதவீதம் அதிக பட்சமாக ரூ.2.80 லட்சம் மானியத் தொகை ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும்.

ஏற்கனவே உள்ள மீன்வளர்ப்பு குளங்கள் தொட்டிகளை சீரமைத்தல் புதுப்பித்தல் ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத் தொகை ரூ.3.50 லட்சத்தில் 40 சதவீதம் ரூ.1.40 லட்சமாக வழங்கப்படும்.

நன்னீர் மீன்வளர்ப்பு இடுப்பொருள் செலவினம் ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பிற்கு இடுபொருட்களுக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.1.50 லட்சத்தில் 40 சதவீதம் மானியம் ரூ.0.60 லட்சமாக வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் விருப்பமுள்ள விவசாயிகள்,மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மேட்டூர் அணை மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்கலாம்.

விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து அதிகம் பெறப்பட்டால், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 15:57:36
Privacy-Data & cookie usage: