பாஸ்ட்புட் மற்றும் கறவை மாடு பராமரிப்பு, காகித பை தயாரிப்பு இலவச பயிற்சி : ஐ. ஓ. பி வழங்குகிறது

schedule
2018-09-18 | 17:25h
update
2026-07-06 | 02:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Fast food and dairy cow care, paper bag preparation free training: I. O. B provides in Perambalur


பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் விடுத்துள்ள தகவல்:

பயிற்சி மையத்தில் ஃபாஸ்ட்ஃபுட் (துரிதஉணவு), கறவைமாடு பராமரிப்பு, மற்றும் காகித பை தயாரித்தல் பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதற்கு உண்டான வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக,பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

மேற்கண்டபயிற்சிகளின் கால அளவு 10 நாட்கள் . பயிற்சிநேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 என்ற தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 02:23:51
Privacy-Data & cookie usage: