ஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு இலவச பயிற்சி : பெரம்பலூர் ஐ.ஓ.பி

கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்

schedule
2018-12-11 | 15:29h
update
2026-07-06 | 11:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Fast Food Making Free Training: Perambalur IOB – RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) -யின், கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் வெளியிடள்ள தகவல் :

பயிற்சி மையத்தில் 2018ஆம் வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு உண்டான வயது 18க்கு மேல் இருத்தல் வேண்டும். எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

இப்பயிற்சி, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை என தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும், பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து டிசம்பர் 14 ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய தொலைப்பேசி 04328 277896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 11:14:05
Privacy-Data & cookie usage: