காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரம்பலூரில் அதிமுக உண்ணாவிரதம்

schedule
2018-04-03 | 08:25h
update
2018-04-03 | 08:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Fasting hunger strike in ADMK Party in Perambalur for to set up Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும், அதனை செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆர் இளைஞரணி என்.ஆர். சிவபதி, மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது.

Advertisement

பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினரும், மாவட்ட மாணவரணி செயலாளருமான இரா. தமிழ்ச்செல்வன், மாநில மீனவர் அணிச் செயலாளர் பி.தேவராஜன், முன்னாள் துணை சபாநாயகர் அ.அருணாசலம், மாவட்டட அவைத் தலைவர் இரா.துரை, மாவட்ட இணைச் செயலாளர் எம்.ராணி, முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி (வேப்பூர்), கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி வரவேற்றார். உண்ணாவிரதம் நிறைவில் குரும்பலூர் நகர செயலாளர் வி.செல்வரராஜ் நன்றி தெரிவிக்கிறார்.

உண்ணாவிரத போராட்டத்தில், நகர பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, எம்.ஜி.ஆர். இளைஞரணி, அண்ணா தொழிற்சங்கம், சிறுபான்மை பிரிவு, மீனவர் பிரிவு இலக்கிய அணி, அம்மா பேரவை, மகிளரணி, கைத்தறி பிரிவு, மருத்துவரணி, தகவல் தொழில் நுட்ப அணி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள். பெரம்பலூர் நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , தொண்டர்கள் பெரும் திரளாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று மருந்து கடைகள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 06:36:00
Privacy-Data & cookie usage: