பெரம்பலூர் அருகே பெற்ற மகளையே போதையில் கற்பழித்த தந்தை கைது

schedule
2017-02-20 | 05:26h
update
2026-06-17 | 12:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Father arrested for raping the daughter intoxicated near in perambalur

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், வரகுபாடி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 38), இவரது மனைவி உமா ( வயது 35). இவர்களுக்கு இருமகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Advertisement

உமா நேற்று வேலைக்கு சென்று விட்டார். அப்போது போதையில் வீட்டிற்கு வந்த செல்வம் தனது 9 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வேலைக்கு சென்று திரும்பிய உமா தனது மகள் அதிர்ச்சியிலும், சோகத்துடன் இருப்பதை அறிந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.

இது குறித்து தாய் உமா கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை நேற்று கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகளையே போதையில் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 12:08:44
Privacy-Data & cookie usage: