தந்தை திட்டியதால் தனயன் விஷம் குடித்து தற்கொலை!

schedule
2017-06-13 | 17:34h
update
2026-05-25 | 19:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Father scolded son commit suicide drinking poison!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணி (வயது 25).

இவருக்கும் கேரளாவை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஓராண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

Advertisement

மனவேதனையில் இருந்த மணி தினசரி மதுகுடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மணி மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரது தந்தை ஆறுமுகம் ஏன் தினமும் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறாய் என கூறி திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மணி மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் வீட்டினருகே கிடந்துள்ளார்.

இதை கண்ட உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக கை.ககளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 19:59:51
Privacy-Data & cookie usage: