பெரம்பலூரில், பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

schedule
2023-03-22 | 16:59h
update
2023-03-22 | 16:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Female doctor hanged herself in Perambalur! Police investigation!!

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இளம் பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துர் அருகே உள்ள கல்பகனூரை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் பிரியங்கா (28), எம்.டி படித்த இவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார். பெரம்பலூர் கல்யாண் நகரில் சதாசிவம் என்பவரது வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். வழக்கம் போல் பணிக்கு சென்ற இவர் மதியம் 1 மணிக்கு வீடு திரும்பி உள்ளார்.

Advertisement

டாக்டர் பிரியங்கா மதியம் 02.09 மணிக்கு அவரது தந்தை கடைசியாக தொலைபேசியில் பேசியுள்ளார். அவரது சகோதார் அழைத்த போது, அழைப்பை ஏற்காத காரணத்தால் சந்தேகமடைந்து தனது பெற்றோருக்கு தகவல் சொல்லி நேரில் சென்று பார்க்க கூறியுள்ளார். பெற்றேர்கள் நேரில் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள் தாழ்ப்பாள் இடப்பட்டு பூட்டப்பட்டு இருந்ததால் பிரியங்காவின் தந்தை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு இறந்து தரையில் அமர்ந்த நிலையில் இருந்துள்ளார்.

இது குறித்த தகவலின் பேரில் சடலத்தை கைப்பற்றி போலீசார், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண் மருத்துவர் கடந்த வாரம் ஏழு நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்று வந்துள்ளார் என்றும், அறையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுக்கும் மாத்திரைகள் இருந்ததும், உள்ளன. இறந்த டாக்டரின் தந்தைக்கு கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 11:38:21
Privacy-Data & cookie usage: