பெரம்பலூர் அருகே பெண் மர்ம சாவு : கோட்டாச்சியர் முற்றுகை

schedule
2017-07-09 | 19:31h
update
2026-04-29 | 06:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Female Mystery Death near Perambalur: RDO Siege


பெரம்பலூர் அருகே இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் இறந்து போனதால், பெண்ணை அவரது கணவரே அடித்து கொன்றுவிட்டதாக கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கோட்டாசியரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (31), இவரது மனைவி சுருதி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் குழந்தை இல்லாததால் அவ்வப்போது ராஜாவுக்கும், சுருதிக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டு தகராறு நடந்து வந்தாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் இன்று வீட்டில் ஆள் யாரும் இல்லாத போது சுருதி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். வெளியே சென்றிருந்த ராஜா வீட்டிற்கு வந்தபோது மனைவி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தார். அங்கு சுருதியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆனதால் சுருதி வரதட்சணை கொடுமையால் இறந்துள்ளாரா என விசாரணை நடத்த பெரம்பலூர் கோட்டாசியர் கதிரேசன் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சுருதியின் தாய் தனலெட்சுமி மற்றும் உறவினர்கள் கோட்டாசியர் கதிரேசனை முற்றுகையிட்டு சுருதியின் சாவில் மர்மம் உள்ளதாகவும், பிரேத பரிசோதனையை 2 மருத்துவர்கள் கொண்ட குழு பரிசோதிக்க வேண்டும் என்றும் ராஜா, சுருதியை அடித்து கொன்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை நடத்த கோட்டாசியர் கதிரேசன் உத்தரவிட்டார். இதன் பின்னர் முற்றுகையை கைவிட்டனர். , இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வி.களத்தூர் போலீசார் சுருதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துள்ளனரா என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 06:29:25
Privacy-Data & cookie usage: