பெரம்பலூர் உரக்கடை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை ரூ.70 ஆயிரம் ரொக்கம் துணிகர கொள்ளை

schedule
2018-01-24 | 18:14h
update
2026-06-26 | 14:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

fertilizer shop owner’s home 10 pounds jewelry of Rs 70 lakh robbery in Venture near in perambalur

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலத்தூர்கேட் கிராமத்தில் ரவிச்சந்திரன் வயது (55). உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மணைவி யோகேஸ்வரி (வயது 40) ராஜேஸ்கிருஷ்ணா (வயது 18) மகனும், அனுஸ்ரீ (வயது 12) மகளும் உள்ளனர்.

Advertisement

ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டிடத்தில் கீழ் பகுதியில் உரக்கடையும் மேலே பகுதியில் உள்ள வீட்டிலும் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல விடிந்ததும் ரவிச்சந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார், யோகேஸ்வரி வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தார், அனுஸ்ரீ மாடியில் உறங்கி கொண்டு இருந்தார்.

இந்நிலையில், வீட்டிற்கு தண்ணீர் செல்லும் குழாய் வழியே வீட்டில் ஏறிக் குதித்த மர்ம நபர் மேஜையில் வைத்திருந்த, 10 பவுன் நகை ரொக்கம் 70 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 14:37:21
Privacy-Data & cookie usage: