Fertilizer supplies at low prices to Namakkal district farmers through cooperatives

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமீப காலமாக உரம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றம் தட்டுப்பாடு காரனமாக கடந்த மாதம் 1ம் தேதி முதல் அனைத்து கம்பெனிகளும் உரத்தின் விலையை உயர்த்தியுள்ளன.

இந்நிலையில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தற்போது இருப்பில் உள்ள டான்பெட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட உரங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் வாங்கி பயன்பெறலாம். இதன்மூலம் விவசாயிகள் மார்க்கெட் விலையைவிட ஒரு மூட்டைக்கு ரூ.50 முதல் 250 வரை விலை குறைவாக பெற முடியும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!