கிராமியக் கலைஞர்கள், கலைக்குழுக்களுக்கு இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள்  வாங்க  நிதியுதவி : பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2020-06-04 | 14:48h
update
2020-06-04 | 14:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

finance Aid to Purchasing of Musical instruments and Clothing accessories for Village Artists and Team: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்புமிக்க தமிழக கிராமியக் கலைகளை போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

அதன்படி, தொன்மை சிறப்புமிக்க தமிழக கிராமியக் கலைகளை போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.5000- வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ. 10 ஆயிரம் வீதம் 100 கலைக்குழுக்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேற்காணும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்க விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சோ;ந்த கிராமிய கலைஞர்களின் வயது 2020 மார்ச் 31 தேதியில் 16 ஆண்டுகள் நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தைப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் இலவசமாக வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஜுன். 30க்குள் அல்லது அதற்கு முன்னரோ உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600 028. (தொலைபேசி எண் – 044-2493 7471) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 03:28:59
Privacy-Data & cookie usage: