களவு பொருளை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்: வாபஸ்

schedule
2017-05-23 | 15:12h
update
2026-06-27 | 22:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் களவு போனவற்றை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் சமாதான பேச்சுவார்த்தையால் வாபாஸ் :

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் சுற்றுப் பகுதியில் மாடுகள் ஆடுகள் நகைகள் ஆட்டோக்கள் என தொடர் திருட்டு நடந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி பெரம்பலூர் மாவட்டக் குழுவிடம் கோரிக்கை வைத்தனர்.

Advertisement

அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் அப்போது இருந்த மாவட்ட காவல் கண்கானிப்பாளரை கண்டித்து பாடாலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனாலும் இதுவரை புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் பெரம்பலூர் மாவட்டக்குழு மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் இன்று பாடாலூர் காவல்நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதனையறிந்த காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து அழைத்து பேசினர். சிபிஎம் மாநிலக்குழு எம்.சின்னதுரை மாவட்டக்குழு என்.செல்லதுரை எ.கலையரசி, வட்டசெயலாளர் ராஜாங்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் எனவும், திருட்டு போன ஆடு மாடு நகைகள் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்பகுதி பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே திருட்டு பயத்தை போக்க போலீசாரை ரோந்துபணிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 22:28:52
Privacy-Data & cookie usage: