பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் தீமிதி திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு

schedule
2023-07-23 | 18:49h
update
2023-07-23 | 19:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Fire walk festival at Poolampadi near Perambalur! 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயில், முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
யாக வேள்வியில் 96 வகை மூலிகை திரவிய பொருட்கள் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மஹாபூர் னா ஹீ தியும் தீபாரதனையும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

Advertisement

மேலும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திரெளபதி அம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பூலாம்பாடி கடம்பூர் பெரியம்மாபாளைம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், இந்நாள் எம்.எல்.ஏக்கள் ஆர்டிஓ நிறைமதி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று மாலை தீமிதி திரு விழா நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் நல்லதண்ணீர் குளம் எனும் பகுதிக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். தீமிதிப்பவர்கள் மஞ்சள்ஆடை அணிந்துநீராடி பயபக்தியுடன் அம்மனை வேண்டினர். பின்னர் பக்தர்கள் அருள்வந்து ஆடினர். பம்பை சப்தம் அதி ரபக்தர்கள் சாமியாடியபடி கோவில் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு திரண்டிருந் த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மத்தியில் தீமிதி திருவிழா நடைபெற்றது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தீமித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள், டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 16:13:57
Privacy-Data & cookie usage: