பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த பூனையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

schedule
2019-10-28 | 07:28h
update
2019-10-28 | 07:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Firefighters rescuing cat fallen into well at Perambalur

பெரம்பலூரில் இன்று காலை 8 மணியளவில் வழி தவறிய பூனை ஒன்று மதனகோபலாபுரம், ஓம்சக்தி கோயில் அருகே உள்ள மீனாட்சிசுந்தரம் என்பவரது வீட்டில் கிணற்றில் விழுந்து விட்டது. பூனை கத்தி கொண்டு இருந்தது. வேறு எங்கேயோ சத்தமிட்டு கொண்டுள்ளது என நினைத்த அக்கம்பக்கத்தினர் அலட்சியம் செய்து விட்டனர். ஆனால், 10 மணி ஆகியும் பூனையின் கூக்குரல் குறையவில்லை, இதனால் வீட்டில் இருந்தவர்கள் கிணற்றை எட்டி பார்த்த போது கிணற்றில் விழுந்து தத்தளித்த பூனை பாறை இடுக்கில் நின்று கொண்டு ஓலமிடுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் கூடை, வாளி உள்ளிட்டவைகளை தண்ணீர் இறைக்கும் கயிறு மூலம் பூனையை மீட்க நடவடிக்கை எடுத்தும் பயனிக்கவில்லை. அதனால், பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் நிலைய அலுவலர் தா.முருகன் தலைமையில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு வீரர்கள் விரைந்து வந்து, அந்த கிணற்றுக்குள் இறங்கி பூனையை மீட்டனர். அதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன், மீட்பு வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Advertisement

படவிளக்கம்: பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த பூனையை மீட்டு சாக்குப்பையில் வீரர்கள் எடுத்து வந்த போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 11:59:02
Privacy-Data & cookie usage: