பூலாம்பாடி தர்மராஜா-திரவுபதி அம்மன் கோவிலின், முதல்நாள் மண்டல பூஜை தொழிலதிபர் டத்தோ. பிரகதீஷ்குமார் தலைமையில் நடந்தது!

schedule
2022-07-08 | 15:47h
update
2022-07-08 | 15:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

First Day Mandal Pooja of Poolampadi Dharmaraja-Draupadi Amman Temple. It was led by DATO PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies

பூலாம்பாடி பேரூரில் உள்ள ஸ்ரீதர்மராஜா – ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைப்பெற்றதை தொடர்ந்து முதல்நாள் மண்டல பூஜை பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ.பிரகதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் ஸ்ரீதிரௌபதி அம்மன்கோவில் புணரமைக்கப்பட்டு ஜுலை 6 ந்தேதி டத்தோ.பிரகதீஸ்குமார் தலைமையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் மண்டலபூஜை தொடங்கி நடந்து வருகிறது.

இதில் ஸ்ரீதிரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டலபூஜை முதல்நாள் நிகழ்வில் கோவில் அறக்கட்டளை தலைவர் சூரியபிரகாசம், விஐபி ராஜா, தொழிலதிபர்கள் மண்மணி, விஜயகுமார், இசைபாலு, ஏகே ராமசாமி, அசோக், பூலாம்பாடி முக்கியஸ்தர்கள் கிருஷ்ணராஜ், மோகன், டத்தோ.பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் என 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 11:42:28
Privacy-Data & cookie usage: