பெரம்பலூரில் முதன் முறையாக, முழு உடல் தானம் பதிவு முகாம்: ஆ. ராசா எம்.பி தொடங்கி வைத்தார்!

schedule
2023-12-29 | 16:57h
update
2023-12-29 | 16:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

First time Whole Body Donation Registration Camp at Perambalur: A. Raja started MP!

பெரம்பலூர் உதிரம் நண்பர்கள், ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி இணைந்து முழு உடல் தானம் பதிவு முகாம் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் சமத்துவபுரம் அருகே ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்லத்தில் பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர், உடற்கூற்றியல் துறை தலைவர் சித்ரா ., அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா உடல் தானம் பதிவு முகமை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மற்றும் திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார்,வீ.ஜெகதீசன், எஸ்‌.நல்லதம்பி, பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், லெட்சுமி மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் லெட்சுமி,மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சித்தளி. ராமச்சந்திரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், பொறியாளர் சிவராஜ், நா.ஜெயராமன், க.மகேஸ்குமரன், அருண் ஆபிரஹாம், வடக்குமாதவி ஊராட்சித் தலைவர் வி.தங்கராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளைகள் தலைவர், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி நா.ஜெயராமன் தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ் , ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம் உட்பட உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளைகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.08.2026 - 08:47:15
Privacy-Data & cookie usage: