தஞ்சாவூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் : குழந்தை உள்பட 5 பேர் பலி.

schedule
2018-05-13 | 12:46h
update
2018-05-13 | 12:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Five Died, including the baby : Car collision on the truck that was standing near Thanjavur.

தஞ்சாவூர் அருகே காரும் ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

தஞ்சாவூர் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30) இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், தஞ்சாவூருக்கு அருகே விளார் சாலை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே வந்தபோது சாலையில் ஜல்லிக் கற்கள் ஏற்றிக் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இதில் காரில் பயணம் செய்த விஜயகுமார் அவரது மாமனார் தட்சிணாமூர்த்தி (55) மனைவி சரண்யா (28) குழந்தை தனுஸ்ரீ (3) கார் ஒட்டுனர் அரவிந்த் (27) உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காரில் பயணித்த உமாராணி, ஜெயஸ்ரீ, ஸ்ரீவஸ்தா ஆகிய மூவரையும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தஞ்சை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 01:05:56
Privacy-Data & cookie usage: