குன்னம், பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு மிதவைப் பேருந்துகள்; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

schedule
2026-02-07 | 19:26h
update
2026-02-07 | 19:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Floating buses from Kunnam, Perambalur to Chennai; Minister Sivasankar inaugurated the service!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் குன்னம் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு செல்லும் வகையிலான 2 புதிய புறநகர் மிதவைப் பேருந்துகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் குன்னம் மற்றும் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார் .

Advertisement

குன்னத்திலிருந்தும் பெரம்பலூரில் இருந்தும் நேரடியாக சென்னைக்கு செல்வதற்கு அரசு பேருந்து வசதிகளை தேவை என்ற பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பெரம்பலூரில் இருந்து விழுப்புரம் வழியாக தினசரி சென்னை செல்லும் வகையிலான மிதவை பேருந்தை பெரம்பலூர் பேருந்து நிலையத்திலும், குன்னத்திலிருந்து வேப்பூர், ஒகளூர், ஆடுதுறை, லப்பைகுடிகாடு மற்றும் தொழுதூர் வழியாக தினசரி சென்னை செல்லும் மிதவை பேருந்தை குன்னம் பேருந்து நிலையத்திலும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதனால் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை உணர்ந்து பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப. பரமேஸ்குமார், வேப்பூர் முன்னாள் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, விசிக முன்னாள் மண்டல பொறுப்பாளர் கிட்டு மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.06.2026 - 09:31:33
Privacy-Data & cookie usage: