பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மூடுபனி: மக்கள் மகிழச்சி!

schedule
2022-09-02 | 09:25h
update
2022-09-02 | 09:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Fog in various places in Perambalur district today: People are happy!

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்றிரவு முதல் குளிர் அதிமாக இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பனிமூட்டம், அதிகரித்து சாலை மற்றும் தெருவிளக்கு களின் வெளிச்சத்தை மறைத்தது காலை 6 மணிமுதல் சுமார் 7.30 வரை பனிமூட்டம் வீதிகளில் உலா வந்தது. கைகளால் சிறுவர்கள் சுழற்றி விளையாடி மகிழ்ந்தனர். மேலும் மாடி வீடுகளில் ஜன்னல் வழியாக வந்த பனிமூட்டம் காற்றாடிகளில் சிக்கி சுழன்றன. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடைவாசஸ்தலங்களை போன்று, எசனை, பாப்பாங்கரை, அரசலூர், அன்னமங்கலம், தொண்டைமாந்துறை, விசுவகுடி, இரட்டைமலை சந்து ஆகிய பகுதி மக்கள் பெரும் பனிமூட்டத்தை அனுபவித்து மகிழ்ந்தனர். சூரிய வெளிச்சம், சுமார் 8 மணி அளவிலேயே தெரிந்தது.

Advertisement

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 17:01:21
Privacy-Data & cookie usage: