தீபாவளிக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கம்.

schedule
2020-11-10 | 02:32h
update
2020-11-10 | 02:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

For Deepavali, buses are available from all major cities on behalf of the Tamil Nadu State Transport Corporation.

அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வரும் 14 அன்று தீபாவளி பண்டிகையினை சிறப்பாகவும், பாதுகாப்புடனும் கொண்டாட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பொதுமக்கள் எளிதாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது.

Advertisement

பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பொதுமக்கள் எளிதாக எவ்வித இடையூறுமின்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய இடங்களுக்கு 11.11.2020, 12.11.2020, 13.11.2020 ஆகிய நாட்களிலும் இயக்கப்பட உள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இச்சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

நவ.11 முதல் 13 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர் திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்புண்டி, வேதாரண்யம், பெரம்பலூர் தட பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

மேலும், தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல நவ.14, மற்றும்15,16, 17 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் பெரம்பலூர் நகரிலிருந்து பெரம்பலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்து சேவையினை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 20:22:59
Privacy-Data & cookie usage: