பிறமொழிக் கலப்பில்லாமல் பேசுவோர்களுக்கு. ‘தூய தமிழ்ப் பற்றாளர் பரிசு!’

schedule
2021-08-19 | 01:25h
update
2021-08-19 | 13:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

For non-native speakers. ‘Pure Tamil Debtor Gift!’

நடைமுறையில் மக்களிடம் பேச்சு வழக்கிலும், அனைத்து இடங்களிலும் பிற மொழிக் கலப்பில்லாமல் எங்கும் எதிலும் தூய தமிழைப் பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழியாகப் பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் 3 தூய தமிழ்ப் பற்றாளர்களைத் தெரிவு செய்து அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா உரூபா 5000/- (உரூபா ஐந்தாயிரம்மட்டும்) பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

Advertisement

பரிசுத் தொகையைப் பெறுவதற்கு விருப்பமுள்ள தூய தமிழ்ப் பற்றாளர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தைச் சொற்குவை.காம் www.sorkuvai.com என்ற வலைத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து patralarparisu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அஞ்சல் வழியாகவோ “இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்ககம், நகர் நிருவாகஅலுவலக வளாகம், முதல்தளம், எண். 75, சாந்தோம்நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை – 600 028” என்றமுகவரிக்கு31.08.2021ஆம் நாள்மாலை 5.00 மணிக்குள் கிடைப்பது போல் அனுப்பி வைக்க வேண்டும். உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

மேலும், விண்ணப்பிப்பவரின் தூய தமிழ்ப் பற்றை உறுதி செய்து வழங்கும் நற்சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் நற்சான்று அளிக்கும் தமிழறிஞர்களின் ஒருபக்கஅளவிலான வாழ்க்கைக் குறிப்புகளையும் (Bio-data) இணைத்துஅனுப்பி வைக்க வேண்டும்.இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு அகவை வரம்போ, கல்வித் தகுதியோ கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2026 - 21:53:01
Privacy-Data & cookie usage: