முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 69 பிறந்த நாள்: பெரம்பலூரில் 1500 பேருக்கு சேலை

schedule
2017-02-25 | 01:41h
update
2026-06-27 | 22:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Former C.M., J.Jayalalithaa 69 Birthday: in Perambalur 1,500 saree Provided to women

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 69 பிறந்த நாள்: பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் 1500 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மேற்கு வனொலித் திடலில், மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நகர செயலாளர் இராஜபூபதி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் இன்று 1500 ஏழை பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

Advertisement

முன்னதாக நகர பொருளாளர் டி.ஜெகதஸ்வரன், வரவேற்றார். ஒன்றிய செயலாளர் என்.சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் துணைசபா நாயகர் வரகூர் அ.அருணாசலம், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளரும், தொகுதி எம்.எல்வுமான இரா.தமிழ்ச்செல்வன், மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் பி.தேவராஜன், மாவட்ட அவைத் தலைவர் நெய்க்குப்பை இரா.துரை மற்றும் மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோ.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பெரம்பலூர் நகர பகுதி செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அணி பொறுப்பாளர்கள், மகளிரணியினர், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 11வது வார்டு அம்மா பேரவை செயலாளர் சி.முருகையா நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 22:37:16
Privacy-Data & cookie usage: