முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவு தின மவுன ஊர்வலம் : பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ஆர்

schedule
2019-12-04 | 14:35h
update
2019-12-04 | 14:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Former Chief Minister J. Jayalalithaa, silent procession to the Memorial Day: Perambalur District Secretary RTR Information

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாளை (டிச.5ம்தேதி) மவுன ஊர்வலமும், மலரஞ்சலி செலுத்தி உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது .

Advertisement

இதுகுறித்து பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும் , குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளான நாளை (5ம்தேதி) காலை 10மணியளவில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கி பெரம்பலூர் புது பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையில் முடிவடைகிறது.

அங்கு ஜெயலலிதாவிற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்படுகிறது.இதைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகளில் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பிக்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் இதர மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 07:46:47
Privacy-Data & cookie usage: