முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவு தினம்: பெரம்பலூரில், இன்று ஆயிரக் கணக்கானோர் மவுனஞ்சலி!

schedule
2021-12-05 | 07:20h
update
2021-12-05 | 07:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Former Chief Minister J Jayalalithaa’s Memorial Day: Thousands pay homage today in Perambalur!

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆயிரக்ககணக்கான தொண்டர்கள் மவுனஞ்சலி செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள், பேரூர், நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 5வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயிற்பகுதியில் திரண்டனர். அங்கு, அலங்கரிக்கப்ட்ட முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். அங்கு கூடியிருந்த அதிமுகவினர் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் கொள்கைப்படியும், மக்காளால் நான், மக்களுக்காகவே நான், என்ற வாக்கிற்கிணங்க அதிமுகவை வழிநடத்தி செல்ல சூளுரை எடுத்து கொண்டனர். முன்னாள் பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன் (ஆலத்தூர்), என்.சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), செல்வக்குமார் (பெரம்பலூர்), நகர செயலாளர் ராஜபூபதி மற்றும் மகளிர் அணியினர், தொழிலாளர் அணியினர், கூட்டுறவு சங்க தலைவர்கள், சிறுபான்மை பிரிவு, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, கலை இலக்கிய பிரிவு, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் குரும்பாபாளையம் நகராஜன், வழக்கறிஞர் அணி பாலமுருகன், உள்ளிட்ட பேரூர், நகர பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட கட்சியின் பல முக்கிய பிரதிநிதிகள் தொண்டர்கள் பெரும் திரளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் புதிய பேருந்து நிலையம் பகுதி ஸ்தம்பித்தது. போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement

முன்னதாக வானொலித் திடல் மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு, பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், வழிபோக்கர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:43:29
Privacy-Data & cookie usage: