பெரம்பலூரில் பியூட்டி பார்லருக்குள் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கைது

schedule
2018-09-13 | 09:07h
update
2026-04-09 | 12:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Former DMK cadre arrested for attacking woman in Perambalur

பெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கலால் ஏற்பட்ட பிரச்சினையில் பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கிய திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் நகரில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருபவர் சத்யா (வயது 40), இவர் தனது வீட்டின் ஒரு பகுதி உட்பட நகரில் மூன்றுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் மயூரி என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

இவருக்கும் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் திமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலரான செல்வக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சத்யாவினுடைய தொழில் விரிவாக்கத்திற்காக செல்வக்குமார் 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்தாக தெரிகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணத்தை செல்வக்குமார் திரும்பி கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள பியூட்டி பார்லரில் புகுந்து சத்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த சத்யா சம்பவம் குறித்து கடந்த 18-07-18ந்தேதி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் இருவரும் சமாதானமாக செல்வதாக எழுதி கொடுத்து விட்டு வந்த நிலையில் மீண்டும் செல்வக்குமார் பணம் கேட்டு மிரட்டுவதாக சத்யா அளித்த புகாரின் பேரில், சிசிடிவி கட்சிகளை ஆதாரமாக கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் போலீசார் செல்வக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பியூட்டி பார்லருக்குள் புகுந்து பெண் ஒருவரை தாக்கியதாக திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வக்குமாருக்கும், சத்யாவிற்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திமுகவை சேர்ந்த வேறு ஒரு முக்கிய புள்ளியின் கட்டுப்பாட்டில் சத்யா சென்றதாலேயே செல்வக்குமார் ஆத்திரமடைந்து சத்யா மீது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், கொடுத்த பணத்தை கேட்பதாகவும் தெறிகிறது.

கள்ளக்காதல் விவகாரம் என்றால் கட்சிக்கும், தனக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் என இப்பிரச்சினை திசை திருப்பப்படுகிறது என தெரியவருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 12:28:32
Privacy-Data & cookie usage: