பெரம்பலூரில் ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ்-ரியல்எஸ்டேட் குழுமத்தின்நிறுவனர் இல்ல திருமணவிழா!

schedule
2021-01-19 | 16:47h
update
2021-01-19 | 16:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Founder House Wedding Ceremony of Sree Amman Bankers-Real Estate Group in Perambalur!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிவரும் ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ்-ரியல்எஸ்டேட் மற்றும் புரொமோட்டர்ஸ், முத்திரைத்தாள் விற்பனையகம், ஸ்ரீமுத்தையா மெட்ரிக்
பள்ளி, ஸ்ரீமுத்தையா கல்வி அறக்கட்டளை என்.எம். ரெசிடென்சி, என்.எம்.கிளினிக், உள்ளிட்ட ஸ்ரீஅம்மன்பேங்கர்ஸ் குழுமத்தின் நிறுவனர் ந.முத்தையா-விஜயாமுத்தையா இவர்களது மகனும், என்.எம்.கிளினிக் டாக்டர் திலீபன்முத்தையாவிற்கும் அந்தமான் பொதுப்பணித்துறை அலுவலர் செல்லபெருமாள் மற்றும் அந்தமான் கல்வித் துறையைச் சேர்ந்த சவுந்தரவள்ளியின் மகளும், அந்தமான் நிகோபார் தீவு இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் செ.ஷில்பிகாதேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் திருமணமகாலில் நடந்தது.

Advertisement

திருமணவிழாவில் தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் நிறுவனத்தலைவா; சீனிவாசன், செயலாளா; நீலராஜ், தந்தை ரோவா; கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின்
மேலாண் தலைவர் ரோவர் வரதராஜன், பெரம்பலூர் எம்.எல்.ஏ.இளம்பை தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி. மருதராஜா, பாரத ரக்ஷா மஞ்ச் இந்துஅமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் மற்றும் தேசிய மீன்வளத்துறை கண்காணிப்புக்குழு உறுப்பினருமான உமேஷ் போச்சப்பன், டாக்டர்கள் எஸ்.கே.செங்குட்டுவன், கோபாலகிருஷ்ணன்(கம்பம்), ஆண்டிமுத்துசின்னபிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆ.கலியபெருமாள், ம.தி.மு.க. மாநில பொறுப்பாளர் செ.துரைராஜ், ரியல்எஸ்டேட் புரொமோட்டர் சாதிக்ஜமால், தொழில்அதிபர் இளையாங்குடி அல்அமீன், மதுரை டிரான்ஸ்போர்ட்அதிபர் கண்ணன், உயர்நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் அழகு.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உயர் அலுவலர் மலையாண்டி, ஆவின் முன்னாள் தலைவர் செல்வம், நெடுஞ்சாலைத்துறைஅலுவலர் சவுந்தரராஜன், சிவனடியார்கள் சிதம்பரம் புலிப்பாணி பரசுராமன், திருவண்ணாமலை வெங்கடேசுசுவாமி மற்றும் தி.மு.க.மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், அ.ம.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் முத்துசாமி மற்றும் பெரம்பலூர், குரும்பலூர், கோனேரிபாளையம், மதுரை, சிவகங்கை, கம்பம் பகுதிகளைச் சேர்ந்த மிராசுதார்கள் மற்றும் டாக்டர்கள், கல்வியாளர்கள், அரசு அலுவலர்கள், வர்த்தக பிரமுகா;கள், ரியஸ்எஸ்டேட் முகவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு
மணமக்களை வாழ்த்தினர். விழாவில் அனைவரையும் டாக்டர் அறிவொளிமுத்தையா, கம்பம் டாக்டர்ஹரிஷாதேவி, அந்தமான் டாக்டர் சி.ஜோதிபெருமாள் மற்றும்
குழுவினர் வரவேற்றனர். மணமக்களுக்கு பெரம்பலூர் பிரம்மபுரிஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில் மற்றும் திட்டக்குடி பெருமுளை ஸ்ரீமுத்தையாசுவாமி கோவிலில் சிறப்புவழிபாடு செய்யப்பட்ட மாலைகள் மற்றும் பட்டாடைகளை அணிவித்து சிவாச்சாரியார்கள் ஆசீர்வதித்தனர்.

திருமணத்தில் பெண்களுக்கு வளையல்கள், நகபாலீசு, மெகந்தி, ரோஜா, மல்லிகை பூக்கள், குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய், பலூன்கள், சாக்லெட்டுகள், குளிர் பானங்கள், பீடா, புரூட்சாலட், மற்றும் திருணமத்திற்கு வந்திருந்தவர்களுக்கு சிறப்பு அறுசுவை திருமண விருந்தும், ஆளுக்கொரு தென்னை மர கன்றும் வழங்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 06:25:20
Privacy-Data & cookie usage: